இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 1,52,565 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,33,55,465 ஆக உயர்ந்து 1,69,305 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,52,565 பேர் அதிகரித்து மொத்தம் 1,33,55,465 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 838 அதிகரித்து மொத்தம் 1,69,305 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 90,328 பேர் குணமாகி  இதுவரை 1,20,78,333 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 11,02,370 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 58,411 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 33,43,951 ஆகி உள்ளது  நேற்று 309 பேர் உயிர் இழந்து மொத்தம் 57,638 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 53,005 பேர் குணமடைந்து மொத்தம் 27,48,153 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 5,36,682 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 6,194 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 11,60,205 ஆகி உள்ளது.  இதில் நேற்று 17 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,768 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,584 பேர் குணமடைந்து மொத்தம் 11,15,342 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 39,774 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 6,955 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 10,55,040 ஆகி உள்ளது  இதில் நேற்று 36 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,849 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 2,584 பேர் குணமடைந்து மொத்தம் 9,80,519 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 61,653 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 5,989 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,26,816 ஆகி உள்ளது  இதில் நேற்று 23 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,886 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,952 பேர் குணமடைந்து மொத்தம் 8,76,257 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 37,673 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 2,309 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,21,906 ஆகி உள்ளது.  நேற்று 12 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 7,291 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,053 பேர் குணமடைந்து மொத்தம் 8,95,949 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 18,666 பேர் சிகிச்சையில் உள்ளனர்.