இந்தியாவில் நேற்று 15,353 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,12,44,624 ஆக உயர்ந்து 1,57,966 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,353 பேர் அதிகரித்து மொத்தம் 1,12,44,624 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 76 அதிகரித்து மொத்தம் 1,57,966 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 16,606 பேர் குணமாகி  இதுவரை 1,08,97,486 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 1,84,555 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 8,744 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 22,28,471 ஆகி உள்ளது  நேற்று 22 பேர் உயிர் இழந்து மொத்தம் 52,500 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 9,068 பேர் குணமடைந்து மொத்தம் 20,77,637 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 97,637 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 1,412 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 10,78,740 ஆகி உள்ளது.  இதில் நேற்று 12 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,313 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 3,030 பேர் குணமடைந்து மொத்தம் 10,34,895 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 39,233 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 436 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,55,451 ஆகி உள்ளது  இதில் நேற்று 5 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,367 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 478 பேர் குணமடைந்து மொத்தம் 9,36,250 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 6,815 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 74 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,90,766 ஆகி உள்ளது.   நேற்று 2 பேர் உயிரிழந்து இதுவரை மொத்தம் 7,176 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 61 பேர் குணமடைந்து மொத்தம் 8,82,581 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,009 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 556 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,55,677 ஆகி உள்ளது  இதில் நேற்று 3 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,521 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 532 பேர் குணமடைந்து மொத்தம் 8,39,138 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 4,018 பேர் சிகிச்சையில் உள்ளனர்.