இந்தியாவில் நேற்று 15,614 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,11,12,056 ஆக உயர்ந்து 1,57,195 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,614 பேர் அதிகரித்து மொத்தம் 1,11,12,056 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 108 அதிகரித்து மொத்தம் 1,57,195 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 11,291 பேர் குணமாகி  இதுவரை 1,07,84,568 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 1,65,715 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 8,293 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 21,55,070 ஆகி உள்ளது  நேற்று 62 பேர் உயிர் இழந்து மொத்தம் 52,154 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 3,753 பேர் குணமடைந்து மொத்தம் 20,24,704 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 77,008 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 3,254 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 10,59,404 ஆகி உள்ளது.  இதில் நேற்று 15 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,198 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 4,333 பேர் குணமடைந்து மொத்தம் 10,05,497 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 49,416 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 521 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,51,251 ஆகி உள்ளது  இதில் நேற்று 5 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,331 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 350 பேர் குணமடைந்து மொத்தம் 9,33,097 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 5,804 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 117 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,89,916 ஆகி உள்ளது.   இதுவரை மொத்தம் 7,169 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 66 பேர் குணமடைந்து மொத்தம் 8,82,029 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 718 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 479 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,51,542 ஆகி உள்ளது  இதில் நேற்று 3 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,496 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 490 பேர் குணமடைந்து மொத்தம் 8,35,024 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 4,022 பேர் சிகிச்சையில் உள்ளனர்.