இந்தியாவில் நேற்று 15,903 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,04,79,913 ஆக உயர்ந்து 1,51,364 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 15,903 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,04,95,816 ஆகி உள்ளது.  நேற்று 200 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,51,564 ஆகி உள்ளது.  நேற்று 17,747 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,04,95,816 ஆகி உள்ளது.  தற்போது 2,11,452 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 2,936 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 19,74,488 ஆகி உள்ளது  நேற்று 50 பேர் உயிர் இழந்து மொத்தம் 50,151 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 3,282 பேர் குணமடைந்து மொத்தம் 18,71,270 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 51,892 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 751 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,28,806 ஆகி உள்ளது  இதில் நேற்று 5 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,149 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1181 பேர் குணமடைந்து மொத்தம் 9,07,229 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 8,909 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 197 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,85,234 ஆகி உள்ளது  இதில் நேற்று 2 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 7,133 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 234 பேர் குணமடைந்து மொத்தம் 8,75,690 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 2,411 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 671 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,27,614 ஆகி உள்ளது  இதில் நேற்று 8 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,236 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 877 பேர் குணமடைந்து மொத்தம் 8,08,571 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 6,807  பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 5,507 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,19,766 ஆகி உள்ளது.  இதில் நேற்று 25 பேர் உயிர் இழந்து மொத்தம் 3,348 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 4,270 பேர் குணமடைந்து மொத்தம் 7,51,659 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 64,554 பேர் சிகிச்சையில் உள்ளனர்.