இந்தியாவில் நேற்று 16,803 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,10,96,440 ஆக உயர்ந்து 1,57,087 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,803 பேர் அதிகரித்து மொத்தம் 1,10,96,440 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 112 அதிகரித்து மொத்தம் 1,57,087 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 11,707 பேர் குணமாகி  இதுவரை 1,07,73,275 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 1,61,506 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 8,625 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 21,46,777 ஆகி உள்ளது  நேற்று 51 பேர் உயிர் இழந்து மொத்தம் 52,092 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 3,648 பேர் குணமடைந்து மொத்தம் 20,20,951 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 72,530 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 3,792 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 10,56,150 ஆகி உள்ளது.  இதில் நேற்று 18 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,183 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 4,650 பேர் குணமடைந்து மொத்தம் 10,01,464 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 50,514 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 523 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,50,730 ஆகி உள்ளது  இதில் நேற்று 6 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,326 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 380 பேர் குணமடைந்து மொத்தம் 9,32,747 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 5,638 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 118 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,89,799 ஆகி உள்ளது.   இதுவரை மொத்தம் 7,169 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 86 பேர் குணமடைந்து மொத்தம் 8,81,963 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 667 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 486 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,51,063 ஆகி உள்ளது  இதில் நேற்று 5 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,493 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 491 பேர் குணமடைந்து மொத்தம் 8,34,534 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 4,036 பேர் சிகிச்சையில் உள்ளனர்.