டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,10,29,326 ஆக உயர்ந்து 1,56,598 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,106 பேர் அதிகரித்து மொத்தம் 1,10,43,432 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 144 அதிகரித்து மொத்தம் 1,56,742 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 11,976 பேர் குணமாகி  இதுவரை 1,07,36,433 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 1,48,691 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 8,807 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 21,21,139 ஆகி உள்ளது  நேற்று 80 பேர் உயிர் இழந்து மொத்தம் 51,937 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,772 பேர் குணமடைந்து மொத்தம் 20,08,623 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 59,358 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 4,106 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 10,45,010 ஆகி உள்ளது.  இதில் நேற்று 17 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,137 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,885 பேர் குணமடைந்து மொத்தம் 9,87,720 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 52,865 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 334 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,30,778 ஆகி உள்ளது  இதில் நேற்று 6 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,309 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 313 பேர் குணமடைந்து மொத்தம் 9,30,778 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 6,077 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 94 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,89,503 ஆகி உள்ளது.   இதுவரை மொத்தம் 7,168 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 66 பேர் குணமடைந்து மொத்தம் 8,81,732 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 603 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 463 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,49,629 ஆகி உள்ளது  இதில் நேற்று 6 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,478 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 469 பேர் குணமடைந்து மொத்தம் 8,33,089 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 4,062 பேர் சிகிச்சையில் உள்ளனர்.