டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,11,56,748 ஆக உயர்ந்து 1,57,471 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,425 பேர் அதிகரித்து மொத்தம் 1,11,56,748 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 87 அதிகரித்து மொத்தம் 1,57,471 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 14,074 பேர் குணமாகி  இதுவரை 1,08,24,233 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 1,67,471 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 9,855 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 21,79,185 ஆகி உள்ளது  நேற்று 42 பேர் உயிர் இழந்து மொத்தம் 52,280 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 6,559 பேர் குணமடைந்து மொத்தம் 20,43,349 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 82,343 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 2,768 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 10,67,045 ஆகி உள்ளது.  இதில் நேற்று 15 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,242 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 4,031 பேர் குணமடைந்து மொத்தம் 10,16,515 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 45,992 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 528 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,52,565 ஆகி உள்ளது  இதில் நேற்று 3 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,346 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 413 பேர் குணமடைந்து மொத்தம் 9,34,133 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 6,057 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 135 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,90,215 ஆகி உள்ளது.   இன்று ஒருவர் உயிரிழந்து இதுவரை மொத்தம் 7,170 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 82 பேர் குணமடைந்து மொத்தம் 8,82,219 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 826 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 489 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,52,967 ஆகி உள்ளது  இதில் நேற்று இருவர் உயிர் இழந்து மொத்தம் 12,504 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 494 பேர் குணமடைந்து மொத்தம் 8,36,473 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 3,990 பேர் சிகிச்சையில் உள்ளனர்.