இந்தியாவில் நேற்று 18,650 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,12,29,271 ஆக உயர்ந்து 1,57,890 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,650 பேர் அதிகரித்து மொத்தம் 1,12,29,271 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 97 அதிகரித்து மொத்தம் 1,57,890 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 14,303 பேர் குணமாகி  இதுவரை 1,08,80,880 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 1,85,886 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 11,141 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 22,19,727 ஆகி உள்ளது  நேற்று 38 பேர் உயிர் இழந்து மொத்தம் 52,478 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 6,013 பேர் குணமடைந்து மொத்தம் 20,68,044 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 97,983 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 2,100 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 10,77,328 ஆகி உள்ளது.  இதில் நேற்று 13 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,301 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 4,039 பேர் குணமடைந்து மொத்தம் 10,31,865 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 40,863 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 622 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,55,015 ஆகி உள்ளது  இதில் நேற்று 3 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,362 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 351 பேர் குணமடைந்து மொத்தம் 9,35,772 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 6,862 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 136 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,90,692 ஆகி உள்ளது.   நேற்று ஒருவர் உயிரிழந்து இதுவரை மொத்தம் 7,174 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 58 பேர் குணமடைந்து மொத்தம் 8,82,520 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 998 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 567 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,55,121 ஆகி உள்ளது  இதில் நேற்று ஒருவர் உயிர் இழந்து மொத்தம் 12,518 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 521 பேர் குணமடைந்து மொத்தம் 8,38,606 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 3,997 பேர் சிகிச்சையில் உள்ளனர்.