டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,02,86,329 ஆக உயர்ந்து 1,49,018 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 19,045 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,02,86,329 ஆகி உள்ளது.  நேற்று 244 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,49,018 ஆகி உள்ளது.  நேற்று 22,023 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 98,81,786 ஆகி உள்ளது.  தற்போது 2,52,668 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 3,509 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 19,32,112 ஆகி உள்ளது  நேற்று 58 பேர் உயிர் இழந்து மொத்தம் 49,521 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 3,612 பேர் குணமடைந்து மொத்தம் 18,28,546 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 52,902 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 952 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,19,496 ஆகி உள்ளது  இதில் நேற்று 9 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,090 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,282 பேர் குணமடைந்து மொத்தம் 8,96,116 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 11,271 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 338 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,82,286 ஆகி உள்ளது  இதில் நேற்று 4 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 7,108 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 328 பேர் குணமடைந்து மொத்தம் 8,71,916 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 3,262 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 937 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,18,014 ஆகி உள்ளது  இதில் நேற்று 13 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,122 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,038 பேர் குணமடைந்து மொத்தம் 7,97,391 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 8,501  பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 5,215 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 7,60,934 ஆகி உள்ளது  இதில் நேற்று 30 பேர் உயிர் இழந்து மொத்தம் 3,073 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,376 பேர் குணமடைந்து மொத்தம் 6,92,480 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 65,202 பேர் சிகிச்சையில் உள்ளனர்.