டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,01,47,468 ஆக உயர்ந்து 1,47,128 பேர் மரணம் அடைந்து 97,17,198 பேர் குணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 23,444 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,01,47,468 ஆகி உள்ளது.  நேற்று 337 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,47,128 ஆகி உள்ளது.  நேற்று 24,555 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 97,17,198 ஆகி உள்ளது.  தற்போது 2,80,373 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 3,580 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 19,09,951 ஆகி உள்ளது  நேற்று 89 பேர் உயிர் இழந்து மொத்தம் 49,058 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 3,171 பேர் குணமடைந்து மொத்தம் 18,04,871 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 54,891 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 1,143 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,13,483 ஆகி உள்ளது  இதில் நேற்று ஒருவர் உயிர் இழந்து மொத்தம் 12,039 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,268 பேர் குணமடைந்து மொத்தம் 8,87,815 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 13,610 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 357 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,80,075 ஆகி உள்ளது  இதில் நேற்று 4 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 7,089 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 355 பேர் குணமடைந்து மொத்தம் 8,69,124 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 3,862 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 1,035 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,11,115 ஆகி உள்ளது  இதில் நேற்று 12 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,036 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,120 பேர் குணமடைந்து மொத்தம் 7,89,862 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 9,217 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 5,177 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 7,26,688 ஆகி உள்ளது  இதில் நேற்று 22 பேர் உயிர் இழந்து மொத்தம் 2,915 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 4,801 பேர் குணமடைந்து மொத்தம் 6,60,388 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 63,157 பேர் சிகிச்சையில் உள்ளனர்.