டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,00,99,308 ஆக உயர்ந்து 1,46,476 பேர் மரணம் அடைந்து 96,62,697 பேர் குணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 23,880 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,00,99,308 ஆகி உள்ளது.  நேற்று 329 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,46,476 ஆகி உள்ளது.  நேற்று 27,032 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 96,62,697 ஆகி உள்ளது.  தற்போது 2,87,432 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 3,106 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 19,02,458 ஆகி உள்ளது  நேற்று 75 பேர் உயிர் இழந்து மொத்தம் 48,876 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 4,122 பேர் குணமடைந்து மொத்தம் 17,94,080 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 58,376 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 1141 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,11,382 ஆகி உள்ளது  இதில் நேற்று 13 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,029 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,136 பேர் குணமடைந்து மொத்தம் 8,85,341 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 13,993 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 402 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,79,339 ஆகி உள்ளது  இதில் நேற்று 4 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 7,082 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 412 பேர் குணமடைந்து மொத்தம் 8,68,279 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 3,978 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 1,052 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,09,014 ஆகி உள்ளது  இதில் நேற்று 17 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,012 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,139 பேர் குணமடைந்து மொத்தம் 7,87,611 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 9,391 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 6,049 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 7,15,342 ஆகி உள்ளது  இதில் நேற்று 27 பேர் உயிர் இழந்து மொத்தம் 2,871 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,057 பேர் குணமடைந்து மொத்தம் 6,50,836 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 61,487 பேர் சிகிச்சையில் உள்ளனர்.