டில்லி

ந்தியாவில் நேற்று ஒரே நாளில் 2,56,828 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,56,828 பேர் அதிகரித்து மொத்தம் 1,53,14,714 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,757 அதிகரித்து மொத்தம் 1,80,550 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 1,54,234 பேர் குணமாகி  இதுவரை 1,31,03,220 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 20,24,629 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 28,924 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 38,98,262 ஆகி உள்ளது  நேற்று 351 பேர் உயிர் இழந்து மொத்தம் 60,824 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 52,412 பேர் குணமடைந்து மொத்தம் 31,59,240 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 6,76,520 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 13,644 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 12,53,069 ஆகி உள்ளது.  இதில் நேற்று 21 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,951 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 4,305 பேர் குணமடைந்து மொத்தம் 11,44,791 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,03,001 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 15,783 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 11,76,850 ஆகி உள்ளது  இதில் நேற்று 146 பேர் உயிர் இழந்து மொத்தம் 13,497 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 7,098 பேர் குணமடைந்து மொத்தம் 10,21,250 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,42,084 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 10,941 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 10,02,392 ஆகி உள்ளது  இதில் நேற்று 44 பேர் உயிர் இழந்து மொத்தம் 13,157 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 6,172 பேர் குணமடைந்து மொத்தம் 9,14,119 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 75,116 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 5,963 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,68,000 ஆகி உள்ளது.  நேற்று 27 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 7,437 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,569 பேர் குணமடைந்து மொத்தம் 9,12,510 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 48,053 பேர் சிகிச்சையில் உள்ளனர்.