டில்லி

ந்தியாவில் நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு 3,32,320 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை வரலாறு காணாத உச்சமாக 3,32,320 பேர் அதிகரித்து மொத்தம் 1,62,57,309 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 2,256 அதிகரித்து மொத்தம் 1,86,928 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 1,92,180 பேர் குணமாகி  இதுவரை 1,36,41,606 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 24,22,080 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 67,013 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 40,94,840 ஆகி உள்ளது  நேற்று 568 பேர் உயிர் இழந்து மொத்தம் 62,479 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 62,298 பேர் குணமடைந்து மொத்தம் 33,30,747 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 6,99,858 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 26,995 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 13,22,055 ஆகி உள்ளது.  இதில் நேற்று 28 பேர் உயிர் இழந்து மொத்தம் 5,029 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 6,370 பேர் குணமடைந்து மொத்தம் 11,60,472 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,56,224 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 25,795 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 12,47,997 ஆகி உள்ளது  இதில் நேற்று 123 பேர் உயிர் இழந்து மொத்தம் 13,885 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 5,624 பேர் குணமடைந்து மொத்தம் 10,37,857 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,96,236 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 12,652 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 10,37,711 ஆகி உள்ளது  இதில் நேற்று 59 பேர் உயிர் இழந்து மொத்தம் 13,317 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 7,526 பேர் குணமடைந்து மொத்தம் 9,34,966 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 89,428 பேர் சிகிச்சையில் உள்ளனர்.1

ஆந்திர மாநிலத்தில் நேற்று 10,759 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,97,462 ஆகி உள்ளது.  நேற்று 31 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 7,541 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 3,992 பேர் குணமடைந்து மொத்தம் 9,22,977 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 66,944 பேர் சிகிச்சையில் உள்ளனர்.