டில்லி

ந்தியாவில் நேற்று 3,48,389 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,48,389 பேர் அதிகரித்து மொத்தம் 2,33,40,426 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 4,200 அதிகரித்து மொத்தம் 2,54,225 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 3,55,256 பேர் குணமாகி  இதுவரை 1,93,43,650 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 36,99,661 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 40,956 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 51,79,929 ஆகி உள்ளது  நேற்று 793 பேர் உயிர் இழந்து மொத்தம் 77,191 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 71,966 பேர் குணமடைந்து மொத்தம் 45,41,391 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 5,58,996 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 39,510 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 20,13,193 ஆகி உள்ளது  இதில் நேற்று 480 பேர் உயிர் இழந்து மொத்தம் 19,852 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 22,584 பேர் குணமடைந்து மொத்தம் 14,05,869 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 5,87,452 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 37,290 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 19,67,406 ஆகி உள்ளது.  இதில் நேற்று 79 பேர் உயிர் இழந்து மொத்தம் 5,959 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 32,978 பேர் குணமடைந்து மொத்தம் 15,37,112 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 4,23,955 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலத்தில் நேற்று 20,445 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 15,45,212 ஆகி உள்ளது.  நேற்று 301 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 16,043 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 29,358 பேர் குணமடைந்து மொத்தம் 13,13,112 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 2,16,057 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 29,272 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 14,38,509 ஆகி உள்ளது  இதில் நேற்று 298 பேர் உயிர் இழந்து மொத்தம் 16,178 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 19,182 பேர் குணமடைந்து மொத்தம் 12,60,150 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,62,181 பேர் சிகிச்சையில் உள்ளனர்.