கொரோனா : நேற்று ரஷ்யாவில் ஒரே நாளில் 487 பேர் பலி

மாஸ்கோ

ஷ்யாவில் நேற்று ஒரே நாளில் 487 பேர் கொரோனாவுக்கு பலி ஆகி உள்ளனர்.

உலகெங்கும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன.  இதுவரை சுமார் 8.17 கோடி பேர் பாதிக்கப்பட்டு அதில் 17.81 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர்.  இந்த பாதிப்பு கடந்த சில நாட்களாக ஐரோப்பிய நாடுகளில் அதிகமாகி வருகிறது.

அவ்வகையில் ரஷ்யாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.   இங்கு நேற்று 27,787 பேர் பாதிக்கப்பட்டு சுமார் 30.8 லட்சம் பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  நேற்று ஒரே நாளில் 487 பேர் கொரோனாவுக்கு பலி ஆகி உள்ளனர்.  நேற்று வரை 55.265 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று வரை 24,71,309 பேர் குணம் அடைந்துள்ளனர்.  உலக அளவில் கொரோனா பாதிப்பில் ரஷ்யா நான்காம் இடத்தில் உள்ளது.  அமெரிக்கா, இந்தியா, பிரேசில் ஆகியவை முறையே முதல் மூன்று இடங்களில் உள்ளன.