தனது பிறந்த நாளை இங்கிலாந்தில் கொண்டாடிய தோனி

ண்டன்

நேற்று இங்கிலாந்தில் கிரிக்கெட் வீரர் தோனி தனது பிறந்த நாளை கொண்டாடினார்.

எம் எஸ் தோனி என சுருக்கமாக அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி கடந்த 1981 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 7 ஆம் தேதி பிறந்தவர் ஆவார். இவருக்கு உலகெங்கும் ஏராளாமன ரசிகர்கள் உள்ளனர். இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார். இவருக்கு மத்திய அரசு, ராஜிவ் காந்தி கேல் ரத்னா, மற்றும் பத்மஸ்ரீ விருதுகளை  அளித்து கவுரவித்துள்ளது.

இவர் இந்திய அணியின் தலைவராக இருந்துள்ளார். அத்துடன் தற்போது ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவராக இருக்கிறார். இவர் மிகவும் கஷ்டப்பட்டு முன்னேறியவர் ஆவார். இவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாக வெளி வந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

தற்போது உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தோனி இடம் பெற்றுள்ளார். நேற்று அவருடைய பிறந்த நாள் இந்திய அணியின் சார்பாக கொண்டாடபட்டது. அவர் தங்கி உள்ள ஓட்டலில் தோனி தனது மகள், மனைவி மற்றும் சக வீரர்கள் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடினார்.

 

You may have missed