பாட்னா

த்தாரில் இருந்து வந்த ஒருவர் மரணமடைந்ததால் பீகார் மாநிலத்தில் முதல் கொரோனா மரணம் நிகழ்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது.   இதையொட்டி நேற்று மக்கள் ஊரடங்கு நடத்தப்பட்டது.   அத்துடன் இந்தியாவில் 75 மாவட்டங்களில் கொரோனா தொற்று காணப்படுவதால் அந்த மாவட்டங்களைத் தனிமைப் படுத்துமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

பீகார் மாநிலத்துக்கு கத்தார் நாட்டில் இருந்து 38 வயதான சையப் அலி என்பவர் வந்துள்ளார். அவர் பீகார் மாநிலத்தில் உள்ள முங்கர் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.  அவர் கத்தார் நாட்டில் பணி புரிந்து வருகிறார்.  தற்போது இந்தியாவுக்கு அவர் திரும்பி வந்துள்ளார். அவருக்குச் சோதனை நடத்தப்பட்டது.

சோதனையில் சையப் அலிக்கு கொரோனா தொற்று இருந்தது கண்டறியப்பட்டது.  அதையொட்டி அவர் பாட்னா நகரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டார்.  சிகிச்சை பலனின்றி அவர் நேற்று மரணம் அடைந்தார்.

இது பீகார் மாநிலத்தின் முதல் கொரோனா வைரஸ் பலி ஆகும்.  அது மட்டுமின்றி நம் நாட்டில் இதுவரை முதியோர்கள் மட்டுமே கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர்,  அப்படி இருக்க 38 வயதே ஆன சையப் அலி மரணம் அடைந்தது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.