கருணாநிதி – வைகோ
நேற்றைய சந்திப்பு

ருணாநிதி – வைகோ இடையேயான நேற்றைய சந்திப்பு இருவருக்கும் இடையே இரு்த மனமாச்சர்யங்களை நீக்கியிருக்கும் என்று தி.மு.க. செய்தித்தொடர்பாளரும் சமூக ஆர்வலருமான கே.எஸ். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர், “மனம் திறந்து பேசுகின்றேன்“ என்தனது முகநூல் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

“எனது அரசியல் வாழ்வில் நேற்று நடந்த தலைவர் கலைஞர்-அண்ணன் வைகோ சந்திப்பு மிகுந்த  மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியையும் அளித்தது.

1996க்கு பின்னர் எந்த தேர்தலிலும் போட்டியிடவில்லை.

பெருந்தலைவர் காமராசர் அறிமுகத்துடன் அரசியலில் நுழைந்து,

ஸ்தாபன காங்கிரஸ்-ஆளும் இந்திரா   காங்கிரஸ் இணைப்பு, ஈழப்பிரச்சனை

மதிமுக உதயம், நள்ளிரவில் தலைவர் கலைஞர் கைது  போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளேன்.

கே.எஸ்.ஆர்.

நேற்று தலைவர் கலைஞர் அவர்களை,  செயல்தலைவர் முன்னிலையில் அண்ணன் வைகோ அவர்கள் சந்தித்தது மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் அளித்தது.

இந்த சூழலில் நட்பும் உறவும் நீடிக்க வேண்டும். நீடிக்க வேண்டியது காலத்தின்  அவசியம்.என்னைப் பற்றி கழகத்தினர் அதிகம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் பெருந்தலைவர் காமராசர், பழ.நெடுமாறன்,  எம்ஜிஆர், விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் தம்பி பிரபாகரன், அண்ணன் வைகோ, தலைவர் கலைஞர் ஆகியோரால் விரும்பப்பட்டவன் அடியேன் என்பதை மகிழ்ச்சியுடன் சொல்வேன்.

கே.எஸ்.ஆர். முகநூல் பதிவு

நேற்று நடந்த சந்திப்பு இருவருக்கும் இடையே இருந்த மனமாச்சர்யங்களை நீக்கி இருக்கும் என நம்புகிறேன். இந்த சந்திப்பு தமிழக மக்களுக்கு நிச்சயம் பலனளிக்கும் என நம்புகிறேன். இது என் உள்ளர்ந்த தனிப்பட்ட கருத்து.

2001, 2004 தேர்தல்களம், 2016 ஆகிய காலக்கட்டத்தில் நடந்த குழப்பங்களால் ஏற்பட்ட  பிரிவுகளின் போது நான் பட்ட மனவேதனைகளை வார்த்தைகளால் சொல்ல முடியாது. ஆனால் நேற்றைய சந்திப்பு அத்தனை காயங்களுக்கும் நிரந்தர நிவாரனியாக இருந்தது. உள்ளத்தில் உவகை மேலோங்கியது.

தேசிய நதிநீர் இணைப்பு குறித்து உச்சநீதி மன்றத்தில் பெற்ற தீர்ப்பு,

கூடங்குளம் வழக்கு , கண்ணகி கோட்டம் பிரச்சனையில் பெற்ற தீர்ப்பு, சட்டமேலவை  அமைப்பது தொடர்பாக உயர்நீதி மன்ற தீர்ப்பு, ஆலங்குளம் சிமெண்ட் தொழிற்சாலை வழக்கு,

விவசாயிகள் மீது ஜப்தி நடவடிக்கைகள் ரத்து, இதுபோன்ற பல்வேறு வழக்குகளில் நான் பெற்ற தீர்ப்பும், அந்த தீர்ப்புகளின் மூலம் மக்களுக்கு கிடைத்த நன்மைகள் என் அரசியல் பணிக்கு கிடைத்த பலனாக கருதுகிறேன். இவற்றில் தன்நிறைவு அடைகின்றேன். ஆகவே  நேற்றைய சந்திப்பின் பலனை தமிழக மக்கள் நிச்சயம் அடைவார்கள் என்ற நம்பிக்கை நிறைய உண்டு” – இவ்வாறு கே.எஸ். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.