மும்பை

நேற்றைய பங்கு சந்தை முடிவில் மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண் 600 லும் தேசிய பங்கு சந்தை குறியீட்டு எண் 11600 லும் இருந்தன

நிதிநிலை அறிக்கைக்கு பிறகு இந்திய ரூபாய் மதிப்பு 15 காசுகள் குறைந்து டாலருக்கு நிகராக ரூ.68.57 ஆகியது. உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 0.06% உயர்ந்து பாரல் விலை 64.27 டாலர் ஆக இருந்தது. அதே நேரத்தில் பங்குச் சந்தையில் குறிப்பிடத் தக்க மாறுதல் காணப்பட்டது. முக்கியமாக பல பங்குகளின் விலைகளில் எதிர்பார்த்தை விட சரிவு ஏற்பட்டது.

ஹீரோ மோட்டோ கார்ப், எல் அண்ட் டி, மாருதி, பஜாஜ் ஆட்டோ, மகிந்திரா, டாடா மோட்டர்ஸ், ஹிந்துஸ்தான் யுனிலிவர் போன்ற நிறுவனப் பங்குகள் விலை  3.44% சரிந்தது. அதே நேரத்தில் எஸ் வங்கி,  எச் சி எல், சன் பார்மா, இன்ஃபோசிஸ், ஐடிசி, வேதாந்தா உள்ளிட்ட நிறுவனப் பங்குக்ள் 6% வரை விலை அதிகரித்தன.

நேற்று மாலை பங்குச் சந்தை முடிவடைந்த நேரத்தில் சென்செக்ஸ் 611.07 புள்ளிகளாகவும், தேசிய பங்குச் சந்தை குறியிட்டு ஏண் 11685.15 ஆகவும் இருந்தது. மொத்தத்தில் வெளிநாட்டு நிறுவன பங்குகளில் பல விலை உயர்ந்தும் உள்நாட்டு நிறுவன பங்குகுகளில் பல விலை குறைந்தும் காணப்பட்டன.

இதற்கு நிதிநிலை அறிக்கை மட்டுமின்றி அந்த நிறுவனங்கள் தொடர்ந்து நஷ்டத்தில் இருப்பதே முக்கிய காரணம் என வல்லுனர்கள் கூறுகின்றனர்.