சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, கூட்டணி தொடர்பான அரசியல் பேரம் நடைபெற்று வரும் நிலையில்,அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்த  கருணாஸ் மற்றும் தமிமுன் அன்சாரி கட்சிகள், நேற்று திமுக தலைவரை சந்தித்து திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக கூறினர்.

இந்த நிலையில், இன்று திமுகவுக்கு அளித்த ஆதரவை திரும்ப பெறுவதாக கருணாஸ், தமீமும் அன்சாரி அறிவித்து உள்ளனர். இது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேர்தலில் போட்டியிட்டு, வெற்றிபெற்று  மூம்மூர்த்திகளாக விளங்கிய, முக்குலத்தோர் புலிப்படை கட்சி கருணாஸ், மனிதநேய ஜனநாயக கட்சி தமிமுன் அன்சாரி, கொங்கு இளைஞர் பேரணை தணியாரசு ஆகியோர்,  இந்த முறை திமுக பக்கம் சாய்ந்தன. எடப்பாடி பழனிசாமி எங்களை நம்பவைத்து கழுத்தை அறுத்துவிட்டார் என்று பகிரங்கமாக பேசிய அவர், சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.  பின்னர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு தெரிவித்ததுடன், சில தொகுதிகள் கேட்கப்பட்டதாகவும் கூறப்டுகிறது.

ஆனால், திமுக கூட்டணியில்கருணாஸ், தமிம் அன்சாரி கட்சிகளுக்கு இடங்கள் இல்லை என கூறப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ஏமாற்றம் அடைந்த கருணாஸ் மற்றும் தமிமுன் அன்சாரி தங்களது  கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதைத்தொடர்ந்து, முக்குலத்தோர் புலிப்படை கட்சி திமுகவுக்கு கொடுத்த ஆதரவை திரும்ப பெறுவதாக அக்கட்சியின் தலைவர் கருணாஸ் தெரிவித்துள்ளார். அதுபோல,  மனிதநேய  கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரியும் திமுகவுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்து உள்ளார்.