நேற்று லியனார்டோ டா வின்சி 500 ஆம் நினைவு நாள்

பாரிஸ்

லகப்புகழ் பெற்ற ஓவியர் லியானார்டோ டாவின்சியின் 500 ஆம் நினைவு நாள் ஆகும்.

உலகப்புகழ் பெற்ற ஓவியரான லியனார்டோ டாவின்சி 1452 ஆம் வருடம் இத்தாலி நாட்டில் உள்ள வின்சி என்னும் இடத்தில் பிறந்தார். இவர் ஒரு கட்டிடக் கலைஞரும், பொறியாளர் மற்றும் சிற்பியும் ஆவார்.  பல்துறை மேதையான இவரது ஓவியங்களான “கடைசி விருந்து” (The Last Supper), “மோனா லிசா” (Mona Lisa)  இன்றளவும், புகழ் பெற்று விளங்குகிறது.

மோனாலிசா

 

இவரது தாயார் திருமணத்துக்கு முன் இவரை பெற்றெடுத்தார்.   இவருடைய பிறப்புக்கு பின்பே பெற்றோர்கள் திரும்னம் நடந்தது.   இவர் தனது பள்ளிப் பருவ காலத்தில் கல்வியில் சிறந்து விளங்கினாலும் இவரை பலரும் தவறான வழியில் பிறந்தவர் என  சொல்லி வந்தனர்.  அவர் அதன் பிறகு ஓவியம், சிற்பக்கலை உள்ளிட்ட பல கலைகளையும் கற்று தேர்த்தார்.

கடைசி விருந்து

 

 

லியானார்டோவுக்கு அவரது உதவியாளர்கள் சிலருடன் காதல் உள்ளதாக சொல்லப்பட்டாலும் அவர் யாரையும் தனது வாழ்நாளில் திருமணம் செய்துக் கொள்ளவில்லை.    இவர் தனது புகழ் பெற்ற மோனாலிசா உள்ளிட்ட ஓவியங்களை தனது வாழ்நாளில் யாருக்கும் விற்பனை புரியாமல் தன்னுடனேயே வைத்திருந்தார் என கூறப்படுகிறது.

இவர் 1519 அம் வருடம் பிரான்ஸ் நாட்டில் மறைந்தார்.    அவர் மறைந்து நேற்றுடன் 500 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன.    அதை போற்றும் வகையில் உலகெங்கும் உள்ள பல நாடுகளில் அவருடைய ஓவிய பிரதிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.    பிரஞ்சு அருங்காட்சியகம் ஒன்றில் இவருடைய மோனாலிசா படம் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 500 th anniversary, Leonardo da vinci
-=-