நேற்று பருந்துகள் விழிப்புணர்வு தினம் கொண்டாடப்பட்டது

வுகாத்தி

நேற்று பருந்துகள் விழிப்புணர்வு தினக் கொண்டாட்டம் நடைபெற்றது.

ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாத முதல் சனிக்கிழமை பருந்துகள் விழிப்புண்ர்வு தினமாக கொண்டாடப்படுகிறது.   உணவுப் பொருட்கள் சங்கிலியில் பருந்துகளின் பங்கு மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.  மேலும் சுற்றுச் சூழல்  காக்கும் பணியிலும் பருந்துகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

ஆனால் கடந்த சில வருடங்களாக பருந்துகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்து வருகின்றன.   கடந்த 1999 ஆம் ஆண்டு லட்சக்கணக்கில் வசித்து வந்த பருந்துகள் தற்போது வெறும் ஆயிரக்கணக்கில் உள்ளன.  மும்பை இயற்கை வரலாறுக் கழகத்தை சார்ந்த பேராசிரியர் விபு பிரகாஷ் தற்போது இந்தியாவில் இரு வகையான பருந்துகள் மட்டுமே உள்ளதாகவும் அந்த பருந்துகளின் தொகை கடந்த 20 வருடங்களில் 97% குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கிறார்,

இந்திய அரசு கடந்த 2006 ஆம் ஆண்டு பருந்துகள் மீட்டெடுப்பு திட்டங்களை அறிவித்தது.    அதில் மூன்று முக்கிய அம்சங்கள் உள்ளன.  முக்கியமாக டைக்ளோஃபெனெக் என்னும் விலங்குகளின் மருந்து உபயோகம் அடியோடு நிறுத்தப்பட்டது,   இந்த மருந்துகளால் பருந்துகளின் இனப் பெருக்கம் அழிந்து வருவதால் அரசு இதை நிறுத்தப்பட்டு மற்றொரு மருந்தை உபயோகிக்க தொடங்கியது.

பருந்துகள் சரணாலயங்கள் அமைக்கப்பட்டன.    அரியானா மாநிலத்தில் முதல் பருந்துகள் சரணாலயம் அமைக்கப்பட்டது.  அதன் பிறகு அசம் மாநிலம், மேர்கு வங்கம் மற்றூம் மத்தியப்பிரதேச மாநிலங்களில் சரணாலயம் அமைக்கபட்டன.     பருந்துகளை வேட்டையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

நேற்று இந்த பருந்துகள் சரணாலயத்தில் பல கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டன.   இதன் மூலம் மக்களிடையே பருந்துகள் குறித்த விழிப்புணர்ச்சியை அதிகரிக்கவும் பருந்துகளின் முக்கியத்துவத்தை மக்கள் அறிந்துக் கொள்ளவும் முடியும் என அரசு தெரிவித்துள்ளது.