யோகா: கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த சென்னை பெண்!

சென்னை,

யோகா செய்து சாதனை செய்து கின்னஸ் புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளார் சென்னையை சேர்ந்த பெண் கவிதா.

மூன்றரை வயது குழந்தைக்கு தாயான 31 வயதுடைய  கவிதா பரனிதரன் என்பவர் இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளார். அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

ஏற்கனவே கின்னஸ் சாதனை படைத்த 102 மணி நேர சாதனையை முடியடிக்கும் விதத்தில்,  கவிதா தற்போது யோக மாரத்தான்  செய்து வருகின்றார்.

இவர் தனது சாதனை பயணத்தை கடந்த 23ந்தேதி காலை 7 மணிக்கு தொடங்கினார். இன்று அதிகாலை 2.02 மணி அளவில் முந்தைய சாதனையான, ப்ரடியானா பாடில் என்பவரது 102 மணி நேர சாதனையை முறிடியத்துள்ளார்.

தற்போது தொடர்ந்து யோகா செய்து வரும் அவர், வரும் 30ந்தேதி வரை தொடர முடிவு செய்துள்ளார். இதன் காரணமாக அவர் புதிய சாதனையை படைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

யோகாவில் கவிதா நிகழ்த்தி வரும் சாதனையை பலர் பாராட்டி வருகின்றனர்.