நான் நலம்! வதந்தியை நம்பாதீர்!: பாபா ராம்தேவ்

தான் நலமுடன் இருப்பதாகவும், வதந்தியை நம்ப வேண்டாம் என்றும் பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.


பலவித மூலிகை தயாரிப்புகளை மேற்கொண்டுவரும் கார்பரேட் சாமியர் பாபா ராம்தேவ். இவர், வாகன விபத்தில் மரணமடைந்ததாக சமூகவலைதளங்களில் இன்று வதந்தி பரவியது.
இந்த நிலைியல், தான் பாதுகாப்பாகவும், உடல் நலத்துடனும் இருப்பதாகவும், எந்த ஒரு வதந்தியையும் நம்ப வேண்டாம் என்றும் பாபா ராம்தேவ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், இன்று கூட ஹரித்துவாரில் ஆயிரக்கணக்கானோருக்கு யோகா வகுப்பு எடுத்ததாக அவர் கூறியுள்ளார்.