வுதி

வுதி அரசு யோகா பயிற்சியை ஒரு விளையாட்டுப் பயிற்சியாக அங்கீகரித்துள்ளது

நவுஃப் மார்வாய் என்னும் பெண்மணியால் யோகா சொல்லித்தரப்படும் இஸ்லாமிய நாடான சவுதியில் யோகா வகுப்புகள் நடத்தி வருகிறார்.   இவர் யோகாவுக்கு அங்கீகாரம் கொடுக்கக் கோரி கடந்த 2005 முதல் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறார்.  ஆனால் அரசிடம் இருந்து எந்த பதிலுமில்லாமல் இருந்தது.

இந்நிலையில் இளவரசி ரீமா பிண்ட் பண்டார் ஐசவுத் விளையாட்டுத் துறையின் செயலாளராக நியமிக்கப் பட்டார்.   நவுஃப் நேரடியாக அவரிடம் சென்று யோகா பற்றி விளக்கி கூறி உள்ளார்.   முதலில் யோகா என்பது மதம் சம்பந்தப்பட்டது என அரசுக்கு சிலர் சொல்லி இருந்ததால் அது மதச் சம்பந்தப் பட்டது அல்ல என விளக்கி உள்ளார்.  அதை கேட்ட இளவரசி தனது துறைக்கு சிபாரிசு செய்துள்ளார்.  அவர் சிபாரிசை ஏற்று அரசின் விளையாட்டுத் துறை யோகாவை விளையாட்டுப் பயிற்சியாக அறிவித்துள்ளது.

இதன் மூலம் இனி சவுதியில் யோகா யாரும் கற்றுக் கொள்ள முடியும்.   அத்துடன் யோகாவை கற்பிக்கும் பள்ளியை அமைக்க அரசிடம் அனுமதி கோர முடியும்.    இளவரசி ரீமா யோகாக் கலையை பாராட்டியதுடன் தன்னிடம் நேரடியாக வந்து அனுமதி கேட்ட நவுஃப் மார்வாயையும் பாராட்டி உள்ளார்.

இந்தியாவில் வசிக்கும் ரஃபியா நாஸ் என்னும் இஸ்லாமியப் பெண் யோகா பயிற்சி மேற்கொண்டதும் அதற்கான பயிற்சிகளை அவர் கற்பிப்பதால் அவருக்கு ஃபட்வா என்னும் மரண தண்டனை இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களால் விதிக்கப்பட்டு பின் நீக்கப்பட்டது.   தற்போது ஒரு இஸ்லாமிய நாட்டில் யோகா விளையாட்டுப் பயிற்சி என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.