பொறியியல் கல்லூரிகளில் யோகா கட்டாயம்! மத்தியஅரசு

டில்லி,

நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் யோகாவை கட்டடாயமாக மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து  ஏஐசிடிஇ அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள், யோகா, விளையாட்டு அல்லது சமூக நடவடிக்கைகளில் ஈடுபட்டால் தான் பட்டம் வழங்கப்படும் என ஏஐசிடிஇ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் மாணவ மாணவிகளின் திறனை வளர்க்கும் விதமாக என்.சி.சி. என்எஸ்எஸ் போன்ற சேவைகள் மூலம்  மாணவர்கள் மக்களுடன் பழகும் செயல்பாடுகள் இருந்தன.

கடந்த சில ஆண்டுகளாக எந்தவொரு கல்லூரியும் இதுபோன்ற சமூக சேவை குறித்து கண்டு கொள்வதில்லை.

இந்நிலையில், ஏஐசிடிஇ அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும், என்சிசி, என்எஸ்எஸ், பாரத் அபியான் போன்று யோகாவையும் இணைத்துள்ளது.

கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகள் கண்டிப்பாக யோகா வகுப்புகளில் கலந்துகொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

ஏதாவது ஒன்றில், 25 சதவீத வருகை பதிவு இருக்க வேண்டும் என்றும், இதில் கலந்து கொள்ளாதவர்ள் பட்டம் பெற முடியாத சூழல் ஏற்படும் என்றும் எச்சரித்து உள்ளது.

இது மாணவ மாணவிகளுடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.