பூங்காக்கள், பள்ளிகளில் யோகா பயிற்சி: சட்டப்பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

சென்னை:

க்கள் ஆரோக்கியமாக வாழும் வகையில், அரசு பள்ளிகள் மற்றும் பூங்காக்களில் யோகா பயிற்சி அளிப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சட்டமன்றத்தில்  தெரிவித்தார்.

தமிழக சட்டமன்ற கூட்டத்தின் புத்தாண்டு கூட்டத்தொடர் இன்று 3வது நாளாக நடைபெற்று வருகிறது. கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் உரையின்மீது விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அதைத் தொடர்ந்து கேள்வி நேரத்தின்போத,  திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியன், திமுக ஆட்சியின்போது,  சென்னையில் உள்ள 38 பூங்காக்கள் மற்றும்   பள்ளிகளில், அனைத்து தரப்பினரும் யோகா பயிற்சி பெறும் வகையில், 100 ஆசிரியர்கள் ஆழியார் சென்று யோகா பயிற்சி பெற்றுவந்தனர். அவர்களை இந்த அரசு செயல்படுத்தவில்லை, அவர்கள் மூலம் பொதுமக்களுக்கு யோகா பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதற்கு பதில் அளித்த பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மன அழுத்தம் நீங்கவும் உடல் ஆரோக்கியமாக இருக்கவும், முகம் அழகாக இருக்கவும் யோகா அவசியம் என்று கூறியவர்,  ஆழியாறில் பயிற்சி பெற்ற யோகா ஆசிரியர்களை கண்டறிந்து, மீண்டும் யோகா வகுப்பை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.