யோகா குரு பாபா ராம்தேவ் விபத்தில் மரணம் என வைரலாக பரவும் வதந்தி….

டில்லி,

பாபா ராம்தேவ் இறந்துவிட்டதாக வாட்ஸ்-அப்பில் வைரலாக பரவும் தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

யோகா குரு பாபா ராம்தேவ் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அவரது படத்தை வெளியிட்டு வாட்ஸ்-அப், முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வருகிறது. இதன் காரணமாக வட மாநிலங்களில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

யோகா குரு பாபா ராம்தேவ் இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் யோகா பயிற்சி முகாம்களை நடத்தி வருபவர் பாபா ராம்தேவ். பதஞ்சலி என்ற நிறுவனம் மூலம் பல்வேறு வகையான  உணவு பொருட்கள், அழகு சாதன பொருட்களையும் தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.

இந்நிலையில், பாபா ராம்தேவ் விபத்து ஒன்றில் சிக்கி உயிரிழந்துவிட்டதாக, அவரது படம் போட்டு வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைதளங்களில் வதந்தி வைரலாக பரவியது.

இதை பார்த்த பெரும்பாலோர் அதிர்ச்சி அடைந்து வருகிறார்….

இந்நிலையில், வதந்தி குறித்து அறிந்த பாபா ராம்தேவ், , “நான் பாதுகாப்பாகவும், உடல் நலத்துடனும் உள்ளேன். எந்தஒரு வதந்தியையும் நம்பாதீர்கள்,” என  தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு உள்ளார்.