பாஜகவில் இணைந்த யோகேஷ்வர் தத்: ஹரியானா தேர்தலில் போட்டியிட திட்டம்

பிரபல மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத், பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டது ஹரியானா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2012 ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்றவர் இந்திய மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத். அரியானா மாநிலத்தைச் சேர்ந்த இவர், அம்மாநில பாஜக தலைவர் சுபாஷ் பர்லாவை சந்தித்து பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். ஹரியானா மாநிலத்திற்கு வரும் அக்டோபர் 21ம் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், தேர்தலில் போட்டியிட யோகேஷ்வர் தத் விரும்பியதாகவும், அதன் காரணமாகவே பாஜகவில் அவர் இணைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

முன்னதாக அரியானா மாநில காவல்துறையில் உயர் பொறுப்பில் இருந்த யோகேஷ்வர்த் தத் அப்பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: assembly, Haryana, polls, wrestling, Yogeshwar Dutt
-=-