க்னோ

உ பி முதல்வர் யோகி, தம்மால் சாலையில் ஈத் தொழுகை நடைபெறுவதை தடுக்க முடியாத போது, காவல் நிலையத்தில் ஜன்மாஷ்டமி கொண்டாடுவதையும் தடுக்க முடியாது என கூறி உள்ளார்.

உத்திர பிரதேச காவல் நிலையங்களில் ஜென்மாஷ்டமி (கிருஷ்ண ஜெயந்தி) கொண்டாட்டங்கள் நடைபெறுவதைப் பற்றிய கேள்வி ஒன்றுக்கு நாயகன் கமலஹாசன் பாணியில் உ பி முதல்வர் யோகி பதிலளித்தார்.

அந்த பதிலில் கூறப்பட்டதாவது :

”ஈத் பண்டிகையின் போது சாலைகளில் தொழுகைகள் நடக்கின்றன.  அதை நான் தடுக்கக்கூடாது என்கிறார்கள்.  அப்படி இருக்க காவல் நிலையத்தில் ஜன்மாஷ்டமி கொண்டாட்டங்கள் நடத்துவதை மட்டும் நான் எப்படி தடுக்க முடியும்.   இஸ்லாமியர்கள் அந்த வழக்கத்தை நிறுத்தினால் நானும் காவல் நிலையத்தில் ஜன்மாஷ்டமி கொண்டாட்டங்கள் நடைபெறுவதை நிறுத்துகிறேன்.   கடந்த சமாஜ்வாதி ஆட்சியில் ஜன்மாஷ்டமி கொண்டாட்டங்கள் தடை செய்யப்பட்டிருந்தன.   ஆனால் இப்போது அவை முழு எழுச்சியுடன் கொண்டாடப்படுகின்றன.   பிரார்த்தனைகளும்,  கீர்த்தனைகளும் காவல் நிலையத்தின் செயல் பாடுகளை நிச்சயம் மேம்படுத்தும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், “அனைவருக்கும் அவரவர் மதக் கொண்டாட்டங்களை கொண்டாட முழு உரிமை உள்ளது.   அது கிறிஸ்துமஸ் ஆனாலும் சரி, ஈத் ஆனாலும் சரி, சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட எந்தக் கொண்டாட்டமும் தடை செய்யப்பட மாட்டாது” என தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பு கன்வர் யாத்திரையில் மட்டமான இந்திப்பாடல்கள் பாடுவதை தடை செய்து உண்மையான பக்திப்பாடல்கள் மட்டுமே பாட வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.   அப்போதும் வாத்ய கோஷங்களையும்,  ஆட்டங்களையும் அவர் தடை செய்யவில்லை.   அது பற்றி கேட்டபோது,  “அமைதியாக செல்ல இது இறுதி யாத்திரை அல்ல.  கன்வர் யாத்திரை,   மேளதாளங்கள்,  பாட்டு, நடனம் ஆகியவை இல்லை எனில் அது கன்வர் யாத்திரையே அல்ல” எனக் கூறினார்.

.