டெல்லி:

உ.பி. முதல்வராக யோகி ஆதித்யானத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

உ.பி. சட்டமன்ற தேர்தலில் பாஜ 325 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்த மாநில முதல்வரை முடிவு செய்வது தொடர்பாக பாஜ தீவிர ஆலோசனை மேற்கொண்டு வந்தது. ராஜ்நாத்சிங், யோகி ஆதித்யானத் உள்ளிட்ட சிலரின் பெயர்கள் தீவிர பரிசீலனையில் இருந்தது.

இதையடுத்து இன்று பிரதமர் மோடி, தேசிய தலைவர் அமித்ஷா உள்ளிட்ட ஆட்சி மன்ற குழு கூட்டத்தில் யோகி ஆதித்யானத் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.

இவர் உ.பி. சட்டமன்ற தேர்தலின் போது தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று பாஜ தலைமையை வற்புறுத்தினார். ஆனால் பாஜ இதை அறிவிக்கவில்லை. அதோடு இவர் பரிந்துரை செய்த வேட்பாளர்கள் பட்டியலையும் பாஜ முழுமையாக ஏற்கவில்லை.

இதனால் வருத்தத்தில் இருந்த ஆதித்யாநத் சில நாட்கள் பிரச்சாரம் செய்யாமல் விலகி இருந்தார். இவரது ஆதரவாளர்கள் பாஜ வேட்பாளர்களை எதிர்த்து போட்டி வேட்பாளர்களையும் நிறுத்தியிருந்தனர். பாஜவுக்கு எதிராகவும் பிரச்சாரம் மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.