பேஸ்புக்கில் யோகி ஆதித்யநாத் முதலிடம்

லக்னோ:

பேஸ்புக்.கில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் முதலிடம் பிடித்துள்ளார் என்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு நடந்த கணக்கெடுப்பு மூலம் இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநில முதல்வர்களுக்கான வரிசையில் அதிக லைக், கமென்ட், ஷேர் அடிப்படையில் யோகி ஆதித்யநாத் பிரபலமடைந்துள்ளார்.

ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, குஜராத் முதல்வர் விஜய் ரூபானி ஆகியோரை ஆதித்யநாத் முந்தி முதலிடம் பிடித்துள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.