அகிலேஷ் படம் உள்ள இலவச புத்தகப்பைகளை விநியோகிக்கும் யோகி ஆதித்யா அரசு!

Yogi Adityanath lets Akhilesh Yadav’s face stay on UP school bags

உத்தரப்பிரதேச மாநிலத்தில், முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் படம் இடம்பெற்றுள்ள பள்ளி மாணவர்களுக்கான இலவச புத்தகப்பைகளை அப்படியே விநியோகிக்குமாறு, யோகி ஆதித்யா அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதமே, அப்போதைய முதலமைச்சர் அகிலேஷ் யாதவின் படத்துடன் பள்ளிச் சிறுவர்களுக்கான புத்தகப்பைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டதால் அப்போது, பள்ளி மாணவர்களுக்கு அந்தப் பைகளை விநியோகிக்க முடியவில்லை. அகிலேஷ் படம் இடம் பெற்ற சுமார் 35 ஆயிரம் பைகள் இருப்பில் வைக்கப்பட்டிருந்தன. தற்போது பள்ளிச்சிறுவர்களுக்கு இலவச புத்தகப் பைகள் விநியோகிக்கும் பணி தொடங்கப்பட்ட நிலையில், கல்வித்துறை உயரதிகாரிகளுக்கு அகிலேஷ் படம் இடம்பெற்றிருக்கும் பைகளை என்ன செய்வது எனக் கேட்டு கீழ் மட்ட அலுவலர்கள் கடிதம் எழுதினர். அதற்கு பதில் அனுப்பி இருந்த கல்வித்துறை உயரதிகாரி, முந்தைய அரசு தயாரித்த பைகளை அப்படியே விநியோகிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். எனினும், அகிலேஷ் படத்துடன் அந்தப் பைகள் தயாரிக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாக கல்வித்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.