துப்பாக்கி தூக்குவோருக்கு துப்பாக்கி மூலமே பதிலடி…உ.பி. முதல்வர்

லக்னோ:

துப்பாக்கி மூலம் பேசுபவர்களுக்கு அதே பாணியில் பதிலடி கொடுக்கப்படம் என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

உ.பி.யில் போலீசார் என்கவுண்ட்டர் மூலம் ரவுடிகளை சுட்டுக் கொன்றனர். மேலும், பலரை துப்பாக்கி சண்டை மூலம் கைது செய்துள்ளனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

இது குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘துப்பாக்கி மொழி மீது நம்பிக்கை உள்ளவர்களுக்கு அதே பாணியில் தான் பதிலடி கொடுக்கப்படும்.

துப்பாக்கியை நம்பிக்கொண்டு மக்களை அச்சுறுத்துபவர்களுக்கு அதே வழியில் பதிலளிக்கப்படும். இதற்காக யாரும் கவலை அடைய வேண்டியதில்லை’’ என்றார்.