ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை வழக்கு சிபிஐக்கு மாற்றி பரிந்துரை: யோகி ஆதித்யநாத் உத்தரவு

லக்னோ: ஹத்ராஸில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை சிபிஐக்கு மாற்றி பரிந்துரை செய்து உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

ஹத்ராஸ் பகுதியில் பட்டியலினத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர், 4 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். கடும் பாலியல் தாக்குதலுக்கு ஆளான அவர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  காங்கிரஸ் எம்.பி. ராகுல், பிரியங்கா காந்தி ஆகியோர் இன்று பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர்.

இந் நிலையில் இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பரிந்துரைத்துள்ளார். முன்னதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்த பிரியங்கா, பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்றார்.