நட்புக்காக சம்பளம் வாங்காமல் ‘நாயே பேயே’ படத்தில் நடித்துக் கொடுத்த யோகி பாபு….!

தனி ஒருவன் உள்ளிட்ட 25 படங்களுக்கும் மேல் படத்தொகுப்பாளராகப் பணியாற்றிய கோபி கிருஷ்ணா தற்போது ‘நாயே பேயே’ என்ற படத்தை தயாரித்துள்ளார்.

இந்த படத்தை சக்திவாசன் இயக்கியுள்ளார். இதில் நடன இயக்குநர் தினேஷ் மாஸ்டர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ஐஸ்வர்யா, ‘ஆடுகளம்’ முருகதாஸ், புச்சி பாபு, ரோகேஷ், கிருஷ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இந்நிலையில் யோகி பாபு, தினேஷ் மாஸ்டர் மற்றும் தயாரிப்பாளர் கோபி கிருஷ்ணாவுடன் கொண்டுள்ள நட்பிற்காக சம்பளம் வாங்காமல் நாயே பேயே படத்தின் விளம்பர பாடலில் நடனமாடி கொடுத்துள்ளார். அந்த பாடல் வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.