கொரோனா தொற்றால் யோகிபாபு திருமண வரவேற்பு நிகழ்ச்சி தள்ளிவைப்பு….?

நகைச்சுவை நடிகர் யோகி பாபு பார்கவி திருமணம் கடந்த மாதம் குலதெய்வ கோவிலில் வைத்து எளிமையான முறையில் நடந்து முடிந்தது .இரு குடும்பத்தாரின் உறவினர்கள் மட்டும் இதில் கலந்து கொண்டனர் .

அடுத்த மாதம் 9ஆம் தேதி சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார் . முதலமைச்சர் முதல் திரையுலக நண்பர்கள் வரை திருமண வரவேற்பு அழைப்பிதழை கொடுத்து வந்தார்.

இந்தநிலையில் கொரோனாவால் நாடு முழுவதும் வருகிற 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்குமா என்று தெரியவில்லை’ எனகூறியுள்ளார் .