Random image

ஹீரோவாகும் மூஞ்சி எனக்கு இல்லை : யோகிபாபு

சென்னை

தாம் கதாநாயகனாக நடிக்க வில்லை என நகைச்சுவை நடிகர் யோகி பாபு தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலக நகைச்சுவை நடிகரான யோகி பாபு முதலில் சிறு வேடங்களில் நடித்து தற்போது முன்னணி நகைச்சுவை நடிகராக உள்ளார்.   இவரு ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளதாகவும் இனி கதாநாயகனாக மட்டுமே நடிக்க உள்ளதாகவும் கூறியதாக ஒரு செய்தி பரவி கோலிவுட்டை பரபரப்பாக்கியது.

இந்த செய்தியை மறுத்த யோகி பாபு ஒரு வீடியோ பதிவில், “இனி நான் கதாநாயகனாக மட்டுமே நடிப்பேன் என ஒரு செய்டி தவறாக வெளியாகி உள்ளது.  இதை பலர் டிவிட்டரிலும் பகிர்ந்துள்ளனர்.   எனக்கு சத்தியமாக அப்படி ஒரு எண்ணம் இல்லை.  கதாநாயகனாக நடிக்கும் அளவுக்கு என் முகம் இல்லை.   அப்படி நடித்து தயாரிப்பாளரை நஷ்டத்துக்கு உள்ளாக்க விரும்பவில்லை.

நான் நடித்த டார்லிங், எனக்கு இன்னொரு பேர் இருக்கு ஆகிய படங்களின் இயக்குனர் சாம் ஆண்டர்சன் படத்தில்  நான் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறேன்.   நான் கதாநாயகன் கிடையாது.   அதை யாரோ தவறாக புரிந்துக் கொண்டு நான் கதநாயகனாக நடிப்பதாக புரளி கிளப்பி விட்டுள்ளனர்.

மீண்டும் சொல்கிறேன்.  என் மூஞ்சி கதாநாயகனுக்கு தகுந்த மூஞ்சி கிடையாது.  இந்த காமெடி மூஞ்சியுடன் நான் நகைச்சுவை நடிகனாகவே இருந்து விடுவேன்.    எனக்கு கடைசி வரை நகைச்சுவை பாத்திரத்தில் நடிக்க மட்டுமே முடியும்.    எனவே நான் சொன்னதாக வரும் தகவல் எதையும் நம்ப வேண்டாம்” என கூறி உள்ளார்.