கார்த்திக் ஜி.கிரிஷ் இயக்கத்தில் சித்தார்த் நடித்துள்ள படம் ‘டக்கர்’. இதில் ‘மஜிலி’ படத்தில் நடித்த திவ்யான்ஷா கெளசிக் நாயகியாக நடித்துள்ளார்.

அபிமன்யூ சிங், யோகி பாபு, முனீஷ்காந்த், ஆர்.ஜே.விக்னேஷ் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு வாஞ்சிநாதன் முருகேசன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பிப்ரவரியில் வெளியாகவுள்ள இந்தப் படத்தில் முதன்முறையாக அப்பா – மகன் என இரட்டைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் யோகி பாபு. பல படங்களில் நடித்திருந்தாலும், இதுவரை எந்தவொரு படத்திலுமே அவர் இரட்டை வேடங்களில் நடித்ததில்லை.