யோகிபாபு நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘பொம்மை நாயகி’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை பா. ரஞ்சித் அவரது நீலம் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.

ஷான் இந்த படத்தை இயக்குகிறார். சுந்தர மூர்த்தி இசை, ஜெயரகு கலை இயக்கம், செல்வா படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.

இன்று படத்தின் ஷூட்டிங் துவங்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் ரசிகர்களை கவர்ந்து ட்ரெண்டாகி வருகிறது.