யோகி பாபு, யாஷிகா ஆனந்த், கோபி சுதாகர், டி.எம்.கார்த்திக், மனோபாலா, அன்புதாசன், பிஜிலி ரமேஷ், ஜான் விஜய், லொள்ளு சபா மனோகர், சித்ரா அக்கா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘ஜாம்பி’.

பிரேம்ஜி அமரன் இசையமைக்கும் இப்படத்தை புவன் நல்லான்.ஆர் இயக்க, எஸ்3 பிக்சர்ஸ் சார்பில் ஆர்.வசந்த் மகாலிங்கமும், வி.முத்துகுமாரும் தயாரிக்கிறார்கள்.

இந்நிலையில், இப்படத்தின் ஒரு காட்சியில் யோகி பாபு ‘கோலமாவு கோகிலா’ படத்தில் நயன்தாரா அணிந்த பாவாடை, சட்டை அணிந்துக் கொண்டு யாஷிகா ஆனந்துடன் ஜோடியாக இருக்கிறார். தற்போது இந்த புகைப்படம் சமூகவ் வலைதளங்களில் வைரலாகி வருகிறது.