‘தெளலத்’ படத்தின் போஸ்டரில் தனது புகைப்படத்தை பார்த்து யோகிபாபு அதிர்ச்சி….!
சில தினங்களுக்கு முன்பு தான் சிறு கதாபாத்திரங்களில் நடித்த படத்தில் கூட, நான் தான் கதாநாயகன் என விளம்பரப்படுத்துவதாக யோகி பாபு வேதனை தெரிவித்தார்.
இந்நிலையில் ரைட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஷக்தி சிவன் இயக்கி நடித்துள்ள படம் ‘தெளலத்’. இதில் ராஷ்மி கெளதம், ஜெயபாலன், ஐசக், வைரவன், அஜய் பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் புதிய போஸ்டரில் யோகி பாபுவை மட்டும் மையப்படுத்தி வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பாக யோகி பாபு தனது ட்விட்டர் பதிவில்
இன்று இந்த விளம்பரம் பார்த்தேன். எனக்கும் ’தெளலத்’ படத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை எனத் தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/cJTJAulEbk
— Yogi Babu (@iYogiBabu) August 12, 2020
இன்று இந்த விளம்பரம் பார்த்தேன். எனக்கும் ’தெளலத்’ படத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை எனத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனபதிவிட்டுள்ளார்.