இறுதிகட்டத்தில் யோகிபாபு நடிக்கும் ‘தர்மபிரபு’ 

யோகி பாபு நடித்து வரும் ‘தர்ம பிரபு’  இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சிறப்பாக நடைபெற்று வருகிறது. எமலோகத்திற்கான படப்பிடிப்பு தளத்தை ஏ.வி.எம். ஸ்டுடியோவில் பிரம்மாண்டமாக அமைத்திருக்கிறார்கள்.

இரண்டாம் கட்ட படப்பிடிப்பு, பூலோக பகுதிக்காக 20 நாட்கள் பொள்ளாச்சியில் தங்கி தொடர் படப்பிடிப்பை நடத்திய குழு  சிறிய இடைவெளிக்குப் பிறகு விரைவில் சென்னையில் இறுதிகட்ட படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது.

இப்படம் முழுநீள நகைச்சுவை படமாக படமாக்கப்பட்டு வருகிறது. இதில் யோகிபாபு எமனாகவும் ராதாரவி அவருடைய தந்தையாகவும் நடிக்கிறார். ரமேஷ் திலக் சித்திரகுப்தனாக நடிக்கிறார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்கிறார். யுவபாரதி பாடல் வரிகளுக்கு ஜஸ்டீன் பிரபாகரன் இசை அமைக்கிறார். லோகேஷ் படத்தொகுப்பாளராகவும், பாலசந்தர் கலை இயக்குனராகவும் பணிபுரிகிறார்கள்.

பாலச்சந்தர் எமலோக தளம் அமைத்து ஏற்கனவே அனைவரின் மனதையும் கவர்ந்துவிட்டார். நிர்வாகத் தயாரிப்பு ராஜா செந்தில் மேற்கொள்கிறார். முத்துக்குமரன் இப்படத்தை இயக்க ஸ்ரீவாரி பிலிம்ஸ் சார்பில் ரங்கநாதன் தயாரிக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published.