நகைசுவை நடிகராக வலம் வந்த யோகி பாபு தற்போது ஹீரோவாக அவதாரம் எடுத்திருக்கிறார்.

தர்ம பிரபு , கூர்கா என யோகிபாபு ஹீரோவாக நடித்த இரண்டு படங்களும் வசூலில் சாதனை படைத்திருக்கிறது.

இந்நிலையில் யோகிபாபு ஹீரோவாக நடிக்கும் அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இயக்குநர் பாலாஜி மோகனின் ஓபன் விண்டோ மற்றும் ஒய் நாட் ஸ்டுடியோஸ் சசிகாந்த் இணைந்து தயாரிக்கும் “மண்டேலா” படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் யோகி பாபு.

ஒளிப்பதிவாளர் விது அயன்னா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். பரத் சங்கர் இசையமைக்கிறார் , எடிட்டர் பிலோமின் ராஜ் இப்படத்திற்கு ஒலிப்பதிவு செய்கிறார்.

டூலெட் படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த நடிகை ஷீலா ராஜ்குமார் யோகிபாபு ஜோடியாக நடிக்கிறார்..யோகி பாபு இதில் முடிவெட்டுபவராக நடிக்கிறார்.