யோகி பாபுக்கு நடக்க இருந்த பாலாபிஷேகம் ரத்து…!

யோகி பாபு நடிப்பில் சென்னை ரோகிணி திரையரங்கில் இன்று ரிலீசாகியுள்ள ‘பட்டிபுலம்’ என்ற படத்தில் வைக்கப்பட்டிருக்கும் யோகி பாபு கட் அவுட்டுக்கு அவரது ரசிகர்கள் இன்று பாலாபிஷேகம் செய்வதாக இருந்தார்கள்.

இன்று மாலை 3.30 மணியளவில் பாலிபிஷேகம் செய்வதாக ரசிக்ர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்த நிலையில், பாலாபிஷேகம் என்ற பெயரில் உணவு பொருளை வீணாக்காதீர்கள், என்று ரசிகர்களிடம் யோகி பாபு வைத்த அன்பு வேண்டுகோளால், அவரது கட் அவுட்டுக்கு நடைபெற இருந்த பாலாபிஷேககத்தை ரசிகர்கள் ரத்து செய்துவிட்டார்கள்.