லக்னோ,

தேசபக்தி குறித்து முதல்வர் யோகி எங்களுக்கு பாடம் நடத்தவேண்டியதில்லை என்று உ.பி.மாநில மதரஷா பதிலடி கொடுத்துள்ளது.

 

உத்தரபிரதேசத்தில் வரும் ஆகஸ்டு 15ந்தேதி சுதந்திரத் தினத்தன்று மதரசாக்களில் தேசிய கொடி ஏற்றி அதனை போட்டோ வீடியோ பதிவு செய்து அரசுக்கு அனுப்பவேண்டும் என்று உத்தர விட்டுள்ளார்.

யோகியின் இந்த உத்தரவு முஸ்லிம் மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ள நிலையில், உ.பி.மாநில மதரஸா போர்டு முதல்வர் யோகிக்கு பதிலடி கொடுத்துள்ளது.

அதில், சுதந்திரப்போராட்டத்தில் பங்கேற்று உயிர்த்தியாகம் செய்தவர்கள் நாங்கள். 1947 முதல் ஒவ்வொரு ஆண்டும் மதரசாக்களில் தேசிய கொடியேற்றி விடுதலை நாளை கொண்டாடி வருகிறோம்.

தேசபக்தி குறித்து யோகி தங்களுக்கு பாடம் நடத்தவேண்டியதில்லை என்று கூறி உள்ளது.