ராமர்சிலை அமைக்க வடிவமைப்பாளரை தேடும் யோகி அரசு

யோத்தி

யோத்தி நகரில் உலகின் மிக உயரமான ராமர் சிலை அமைக்க உ.பி அரசு வடிவமைப்பாளரை தேடி வருகிறது.

சமீபத்தில் குஜராத் மாநிலத்தில் உலகின் மிக உயரமான சிலையாக சர்தார் படேல் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அதை ஒட்டி உத்திரப் பிரதேசத்தில் ராமர் சிலை அமைக்கப்பட உள்ளதாக தகவல்க்ள் வெளியாகின. உலகின் மிக உயரமான சிலையாக அமைக்கப்பட உள்ள இந்த சிலை அயோத்தி நகரில் சரயு நதிக்கரையில் அமைக்கப்பட உள்ளது.

இது குறித்து உத்திரப் பிரதேச மாநில அரசு அதிகாரி ஒருவர், “அயோத்தி நகரில் சரயு நதிக்கரையில் அமைக்கப்பட உள்ள ராமர் சிலை உலகின் மிக உயரமான சிலையாக அமைக்கபட உள்ளது. இது குறித்து வரும் 6 ஆம் தேதி அன்று நடக்க உள்ள தெப்போத்சவத்தின் போது முதல்வர் அறிவிக்க உள்ளார். ஆகவே இந்த சிலை அமைப்புக்கான தொடக்க நிலை நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ளோம்.

இந்த சிலை அமைப்புக்கான வடிவமைப்பாளருக்கான ஒப்பந்தப் புள்ளி விளம்பரம் வெளியிடப்பட்டு சில நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அந்த நிறுவனங்கள் கொடுத்த வடிவமைப்பு முதல்வரிடம் அளிக்கப்பட்டு மாறுதல்கள் செய்ய்பாட உள்ளன. அதன் பிறகு வடிவமைப்பாளர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த சிலை பீடம் 50 மீட்டர் உயரமாகவும் சிலை 151 மீட்டர் உயரத்துடனும் அமைப்படும். சிலையின் மொத்த உயரம் 201 மீட்டராக இருக்கும்”என தெரிவித்துள்ளார்.

கடவுள் சிலைகள் பொதுவாக 50 மீட்டர் உயரத்துக்கு மேல் இதுவரை அமைக்கபட்டதில்லை. அதிகபட்ச உயரமாக விஜயவாடாவில் உள்ள ஆஞ்சநேயர் சிலை 41 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது