லக்னோ: கொரோனா வைரஸ் பரவலுக்கு தப்லிகி ஜமாத் அமைப்பின் உறுப்பினர்கள்தான் பொறுப்பு என்று குற்றம்சாட்டி, தனது டிரேட் மார்க் அருவெறுப்பு அரசியலை மீண்டும் தொடங்கியுள்ளார் உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்.
ஒரு செய்தி சேனலுக்காக பேசும்போது இவர் கூறியதாவது, “வைரஸால் பாதிக்கப்படுவது குற்றமல்ல; ஆனால், அதை மறைப்பது மிக மோசமான குற்றம். எனவே, அந்தக் குற்றத்தை செய்தவர்கள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்தக் குற்றத்தை செய்தவர்கள் தபிலிகி ஜமாத் அமைப்புடன் தொடர்புடையவர்கள். உத்திரப்பிரதேசம் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பின்னால் இருப்பது அந்த அமைப்பின் உறுப்பினர்கள்தான். அவர்கள் செயல்பாடு மிகுந்த கண்டனத்திற்குரியது.
அவர்கள் மட்டும் அந்த வைரஸை மறைத்துக் கடத்தும் வேலையை செய்யாமல் இருந்திருந்தால், இந்தியாவில் அதன் பரவலை நாம் பெரியளவில் கட்டுப்படுத்தியிருக்கலாம்” என்று பேசியுள்ளார்.
தனது மாநிலத்தில் மிக மோசமான ஒரு நிர்வாகத்தை வழங்கிவரும் யோகி ஆதித்யநாத், தொடர்ச்சியாக இப்படியான ஒரு அருவெறுப்பு அரசியலை மேற்கொண்டு வருகிறார்.