‘கவ்பாய்’ வேடத்தில் யோகிபாபு நடிக்கும் புதிய படம்..

 

கடல் கொள்ளையர்களை கற்பனை கதாபாத்திரமாக வைத்து, ஆங்கிலத்தில் நிறைய படங்கள் வந்துள்ளன.

இந்த ‘கவ்பாய்’ கதாபாத்திரத்தில் ‘ஜேம்ஸ்பாண்ட்’ ஜெய்சங்கரை ஹீரோவாக்கி, “காமிராமேதை” கர்ணன் பல படங்களை கொடுத்துள்ளார்.

இப்போது கவ்பாய் வேடத்தில் யோகிபாபு நடிக்கும் புதிய படம் தமிழில் உருவாகிறது.

‘கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவண்டா’ என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த படத்தில் மகத் ராகவேந்திரா ஹீரோவாக நடிக்கிறார். பிரபு ராம் சி. டைரக்ட் செய்கிறார்.

பாசிமாலைகளுடன் இணைக்கப்பட்ட தொப்பியை அணிந்து விநோதமான தோற்றத்தில் படம் முழுக்க வருகிறார், யோகிபாபு. படத்தில் அவருக்கு தங்க புதையலை தேடி அலையும் காமெடி கேரக்டர்.

“யோகிபாபுவை மனதில் வைத்தே கவ்பாய் வேடத்தை உருவாக்கினேன். அவரால் மட்டுமே இந்த வேடத்தை செய்ய முடியும். அவரது மற்ற படங்கள் போல் அல்லாது, இதில் யோகிபாபுவின் கேரக்டர் ரொம்பவும் வித்தியாசமானது” என்கிறார், இயக்குநர் பிரபு ராம்.

– பா. பாரதி