கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார் படத்தில் யோகி பாபு….?
பெரிய பட்ஜெட் படங்கள் தொடங்கி, சிறிய பட்ஜெட் படங்கள் வரை முன்னணி காமெடியன் என்றால் அது யோகி பாபு தான்.
ஏற்கனவே யோகி பாபு ஷாருக் கான் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் என்ற படத்தில் நடித்ததன் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகி இருந்தார், மேலும் தெலுங்கிலும் ஒரு படத்தில் அவர் நடித்திருக்கிறார். இந்நிலையில் தற்போது கன்னட சினிமாவில் யோகி பாபு அறிமுகமாக உள்ளார் என தகவல் பரவி வருகிறது.
கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருடன் யோகி பாபு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி இருந்தது.
Tamil Films Famous Comedian @yogibabu_offl met Our @NimmaShivanna on the sets of #Bhajarangi2 pic.twitter.com/BTJ4rJ75zU
— Dr.Shivarajkumar FC™ (@OnlyShivanna) August 19, 2020
அது மட்டுமின்றி சீனியர் நடிகரான சிவராஜ்குமார் உடன் பஜரங்கி 2 படத்தின் சூட்டிங் செட்டில் இருக்கும் புகைப்படமும் வெளியாகி இருக்கிறது.